திருகோணமலையில் மஹிந்த குடும்பம் தஞ்சம் – மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையகத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் தற்போது இன்று (10) இடம் பெற்று வருகிறது- கடற் படை தளத்திற்குள் உள்ளே இருக்கும் முன்னால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் கூட மக்கள் விரக்தியால் வீதிக்கு இறங்கியுள்ளனர்.இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரவு முதல் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தை நோக்கி விமானங்கள் அதிகமாக நடமாடியதால் திருகோணமலைக்கே மஹிந்த குடும்பம் தஞ்சம் அடைந்திருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர் குழைத்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை வெளியேற்றவே தொடர் போராட்டங்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது