பெண் ஒருவரை கத்தியால் குத்திய நபர் மரணம்

கிரிபத்கொடை பகுதியில் நேற்றிரவு (07) கள்ள காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
முந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் நேற்றிரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து குறித்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்துக்கு இலக்கான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் கத்தியால் குத்திய பின்னர் அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி, மற்றொரு கட்டிடத்தின் கூரையில் அதன் வழியாக நடந்து செல்லும் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி [...]

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ பெரகஸ் சந்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் [...]

இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு
இன்று முதல் 12.5 kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் [...]