பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ பெரகஸ் சந்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வென்னபுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இரண்டு சந்தேக நபர்களை மாரவில பொலிஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த சந்தேகநபர் பொலிஸாரை வாளால் தாக்கியுள்ளார். அப்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேக நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவருடன் இருந்த மற்றைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.