ஒரு ரூபாய் கொடுக்காததால் வயோதிபர் மீது தாக்குதல்
உரிய கட்டணத்தை விடவும் ஒரு ரூபாவை குறைத்து வழங்கியமையால், கோபமடைந்த பேருந்து நடத்துனர் ஒருவர், 72 வயதான சிறுநீரக நோயாளர் ஒருவரைத் தாக்கிய சம்பவமொன்று பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த குறித்த நோயாளர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பொலன்னறுவை டிப்போவில் பணியாற்றும் பேருந்து நடத்துனர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய தருணத்தில், பேருந்தில் பயணித்த சிலர் அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.