அதிர்ந்தது தென்னிலங்கை – ஆர்ப்பாட்டத்தில் இசைப்பிரியாவின் புகைப்படம்


அரசாங்கத்ததை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாதத்தை எட்டியது.

அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக மேற்கொள்ளப்படும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 25 நாளை கடந்தும் தொடர்கிறது.

இதேவேளை தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களம் ஆர்ப்பாட்டகாரர்களால் கோட்டா கோ கம என பெயரிடப்பட்டு குறித்த பகுதியில் இருந்து இரவு பகலாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட கோட்டா கோ கமவானது நாட்டின் சில இடங்களில் மேலும் கிளைகளை திறந்து தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவலுகின்றது.

அதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டிய ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைதண்டணை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க விற்கு நீதி வேண்டிய ஆர்ப்பாட்டம் என பல்வேறு கோரிக்கைகளுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை இசைப்பிரியாவின் படத்தினை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர் கருத்து தெரிவிக்கும் போது,

விடுதலைப் புலிகளின் ஊடகங்களான நிதர்சனம் உட்பட அவர்களின் ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் என்ற வகையில் நாங்கள் இசைப்பிரியாவை அறிவோம்.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளராகவே பணியாற்றினார்.அவர் துப்பாக்கியை ஏந்தி போரில் ஈடுபட்டவர் அல்ல. எனது சிறந்த நண்பரான இருந்த திரைப்பட இயக்குனர் கேசவராஜன் நவரட்ணமும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் சம்பந்தப்பட்டு ஊடகவியலாளராக பணியாற்றியவர்.

அவர் திரைப்பட படைப்பாளி, அண்மையில் உயிரிழந்தார். இசைப்பிரியா, கேசவராஜன் நவரட்ணத்தின் மாணவி என்று கூறுகின்றனர்.இசைப்பிரியா போரில் துப்பாக்கி ஏந்தியவர் இல்லை.

அவரும் இறுதிக்கட்ட போரின் போது இடையில் மாறியவர். இசைப் பிரியாவை கொலை செய்தமைக்கான வீடியோக்கள் உள்ளன.சிலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கமும் அது இசைப்பிரியா என்பதை ஏற்கவில்லை. இசைப்பிரியாவும் போரில் காணாமல் போயுள்ளார்.

இசைப் பிரியா ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பதுடன் அவர் இந்த நாட்டில் தனது கொள்கைக்கு அமைய ஊடகப் பணியை செய்த ஊடகவியலாளர் என்ற காரணத்தினால் வாழ்வுக்கு விடை கொடுத்தவர் என்றே கருதுகிறோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *