எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், சில எஞ்சின் ஒயில் வகைகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுள்ளனர்.
இதேவேளை, ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருந்த 4 லீற்றர் இன்ஜின் ஒயிலின் விலை தற்போது ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்துள்ளதாக என்ஜின் ஒயில் கடை உரிமையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்று சில்லறை விற்பனையில் விற்கப்படும் எஞ்சின் ஒயிலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

குளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் [...]

கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் உயர்வு
கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுணவக [...]

மன்னாரில் எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றம்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான நிலை [...]