வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு கைது


பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒல்லாந்து நாட்டு (Holland) பெண்ணொரருரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதான ஒல்லாந்து நாட்டு பெண் நேற்று துன்ஹிந்த அருவியை பார்வையிட சென்ற போது, இந்த பௌத்த பிக்கு, பெண்ணுக்கு பிரித் நூல் ஒன்றை கையில் கட்டியுள்ளதுடன் விகாரைக்கு வந்து பார்வையிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் பின்னர் பௌத்த பிக்கு தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பௌத்த பிக்கு துன்ஹிந்த அருவியை பார்வையிட வருவோருக்கு பிரித் நூலை கட்டி விடுவதை வழக்கமாக செய்து வருபவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைய பௌத்த பிக்கு துன்ஹிந்த அருவி அமைந்துள்ள பகுதியில் உள்ள பௌத்த மடத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து பௌத்த பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *