குளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) பகல் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வேளாண்மை பயிர் செய்கைக்கு சென்ற விவசாயிகள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை சம்பவ தினமான நேற்று பகல் கண்டுள்ளதையடுத்து பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த குளத்தில் நீரில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

நிதி விடுவிப்பு குறித்து ஜனாதிபதியின் விசேட அறிக்கை
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்காலிகமாக நிதியை விடுவிக்க முடியாது என [...]

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 [...]

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு
நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. [...]