திடீர் சுகயீனம் – 50 மாணவர்கள் வைத்தியசாலையில்
பாணந்துறை நகரின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இன்று முற்பகல் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவாசக்கோளாறு காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை அண்மித்த பகுதியில் ரயர்கள் எரியூட்டப்பட்டமையினால் மாணவர்களுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம் என பாணந்துறை வடக்கு காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மாணவர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுகயீனமடைந்த மாணவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.