துண்டாக்கப்பட்ட மின்சார சபை ஊழியரின் கைகள்
மொறட்டுவை பிரதேசத்தில் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மின் பொறியியலாளரின் கைகள் வெட்டப்பட்டதுடன் சந்தேகநபர் வெட்டிய கைகளுடன் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையே இருந்த முன் விரோதம் காரணமாக பாதிக்கப்பட்டவரின் கைகள் முழங்கையில் துண்டிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மின் பொறியியலாளர் மொறட்டுவ பிரதேசத்தில் கொரலவெல்ல பகுதியை சேர்ந்தவராவார்.
சம்பவ இடத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டவரை உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
சந்தேக நபர் வெட்டிய கைகளை எடுத்துச் சென்றிருக்காவிட்டால் கைகளை மீளப் பொருத்தியிருக்க முடியும் என வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்
சந்தேக நபர் கைகளை வெட்டி எடுத்துக் கொணட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்யும் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்