நாடு முழுவதும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.