தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.
பவுசர் வாடகைக் கட்டணத்தை 30% அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பவுசர் வாடகைக் கட்டணத்தை 40% அதிகரிக்கக் கோரி இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.