ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மக்களால் முற்றுகை
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 02:00 மணிக்குப் பிறகு பாதுகாப்புப் படையினரின் எதிர்ப்பு ஏதுமின்றி குழு கலைந்தது.
நாளைய தினம் மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீடு செல்லும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.