ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது
வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 பேர் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆவா குழுவின் பதாகைகளுடன் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.