யாழில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து – இருவர் படுகாயம்


யாழ்.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் – பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கோப்பாய் – மானிப்பாய் வீதியில் உரும்பிராய் சந்தியில் சடுதியாக வீதியை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *