யாழில் இருந்து இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் கைது
யாழ்ப்பாணம் – பலாலியிலிருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படகு ஒன்றில் குறித்த 13 பேரும் பயணித்த நிலையில் இன்று அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட 13 பேரும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.