முல்லைத்தீவில் ஆவா குழு எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள்


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆவா குழுவின் பெயரில் அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அதில் “புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சிலதவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை சில தவறுகள் எமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளன.

தவறுகள் யாதெனில்.. பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அவர்களை வெருட்டி படுக்கைக்கு அழைப்பதும்,

பணம் பறிப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK 001 ஆவா குழுவினர் தகுந்த தண்டனை வழங்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது இதில் தற்போது 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் இன்றில் இருந்து தாங்களவே திருந்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் வீதியோரத்தில் நிக்கவைத்து தர்ம அடிகொடுக்கப்படும்.

அத்துடன் பயங்கர எச்சரிக்கை பாலியல் துஸ்பிரயோகம் மிரட்டி பணம் பறித்தல் கெரோயின் விற்பனை செய்பவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட இருக்கின்றது”

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *