கள்ளக்காதலனின் இரண்டு கையையும் வெட்டிய கணவன்
பெண்ணொருவரின் கணவனும் ,கள்ளக்காதலனும் காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கணவன் கள்ளக்காதலனின் கைகள் இரண்டையும் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் சில நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காலி நகரில் பெண்ணின் கணவனும் கள்ளக்காதலனும் நேருக்கு நேர் சந்தித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவன் கள்ளக்காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,கள்ளக்காதலனை மருத்துவமனையில் அனுமதித்ததுடன்
கணவனை பொலிசாரால் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.