நாளை அதிபர் – ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டம்
நாடு முழுவதும் நாளை ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்த அதிபர், ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ் கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தமை
மற்றும் அரசாங்கத்தின் பொதுமக்கள் எதிர்ப்பு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு செய்யவுள்ளதாக,
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில்
அதிபர் – ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிள்ளைகளின் கல்வி பின்னடைவை சந்தித்துள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம்.
என கல்வி அமைச்சர், டொக்டர் ரமேஷ் பத்திரண ஆசிரியர் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.