பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த கார்
பிரதமர் அலுவலகம் எதிரே உள்ள உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது.
இன்று (31) பிற்பகல் தீ பரவியதாகவும், காரை ஸ்டார்ட் செய்ய முற்பட்ட போது, கார் தீப்பற்றி எரிந்ததாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டில் கொழும்பு நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.