மட்டக்களப்பில் 20 வயது யுவதி கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 780 மில்லிக்கிராம் ஹெரோயின், 2,784 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா, 5 போதை மாத்திரைகளுடன் இன்று (24) பகல் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் பிறந்துறைச்சேனை கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிசார் முற்றுகையிட்டனர்.
இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய பெண்ணை கைது செய்ததுடன் 780 மில்லிக்கிராம் ஹெரோயின், 2,784 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா, 5 போதை மாத்திரைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே இரண்டு தடவைகள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்