ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய தேர் எரிக்கப்பட்டு 36 வருடங்கள் நிறைவு
உலகிலே நான்காவதும், இலங்கையில் முதலாவதுமான பெரிய சித்திரப்பெரும் தேர் திருவிழா 1984ம் ஆண்டு நடைபெற்ற போது, 15 அங்குல அகலமும் 6 அடி உயரமுமான ஆறு சக்கரங்களுடன் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சிற்பாசிரியர்களால் செதுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன், காலைச்சூரியனின் கதிர்களால் தேரின் விமானப்பகுதியில் பதிக்கப்பட்ட பித்தளைத் தகடுகள் தகதகக்க, 1008 வெண்கல மணிகள் அசைந்தாடி நாதமெழுப்ப, எங்கும் என்றுமில்லாத பக்தர்களின் “அரோகரா” என்ற கோசம் வானைப் பிழக்க, சந்தனப்பலகைகளால் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் சந்நிதி முருகனைக் கொண்டு சித்திரப்பெரும் தேர் அசைந்த போது எடுக்கப்பட்ட அரிய கானொளியே இது!
இந்த சித்திரத்தேரானது 20.04.1986அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்பட்டது. இதன் போது சிறிலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆலய பூசகர் உட்பட இருவர் கொல்லப்பட்டிருந்தனர்