புதினாச்செடியின் புதினங்கள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சேர்க்கப்படுகிறது.தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றில் புதினா பிரதானப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

உலக அளவில் சர்வதேசச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

புதினாச் செடிகள் பெரும்பாலும், பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. அவ்வப்போது சாதாரணமாக களை எடுத்தால் போதுமானது.

ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம்.உணவுக்கான புதினா நடவு செய்த 5-வது மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒருமுறை நட்ட செடிகள் 4 ஆண்டுகள் வரை பலன் தரும்.

ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கிலோ இலைகள் கிடைக்கும். எண்ணெய் தயாரிப்புக்கான புதினாவில் இருந்து, ஆவி வடித்தல் முறையில், 150 முதல் 250 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம்.