யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள், அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பன இல்லாது உள்ளதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.