ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு


ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மூன்று வருட பதவிக் காலம் கிடைக்கும்.

இலங்கை பெற்ற இந்த வாக்குகள் பிராந்தியத்தில் நாடொன்று பெற்ற இரண்டாவது அதிகபடியான வாக்குகளாகும்.

இலங்கை இதற்கு முன்னர் 1985-1989 மற்றும் 2006-2008 வரை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *