அல்லைப்பிட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடலில் குளிக்கச் சென்றிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
தனது நண்பியுடன் கடலில் குளிக்கச் சென்றிருந்த சமயம் குறித்த சிறுமி கடலில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் சென்ற மற்றைய சிறுமி ஓடிச் சென்று வீட்டாருக்கு சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டார் ஓடிவந்து சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் விஜயகாந்த் அவந்திகா (வயது11) என்ற அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளார்.