இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
இந்த நிலையில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் மற்றும் விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் துறை லொறிகளுக்கும், மொத்த வியாபாரத்தை மேற்கொள்ளும் லொறிகளுக்கும் முப்படைகளின் எரிபொருள் நிலையங்கள் மற்றும் டிப்போக்களின் ஊடாக எரிபொருளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இராணுவம், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நேற்று (02-07-2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.