பகுதிநேர வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம் – 24 நாட்களாக தொடரும் தேடல்
குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளமைத் தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் நண்பர்கள் என்பதுடன்,பகுதிநேர வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போயுள்ள இருவரையும் தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.