காட்டு யானை தாக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த டபிள்யு எம்.சுனில் வயது (42) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் இருந்து மெதிரிகியவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே வீதியை மறித்து காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ் இளைஞன்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக [...]

யாழில் கொடூர வாள்வெட்டு – இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருமையில் உள்ள வீடொன்றுக்கு [...]

இன்று 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு
நாடு முழுவதும் இன்றைய தினம் குறைந்த நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் [...]