யாழ் நெல்லியடியில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து
யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது பேருந்தில் குறைந்தளவான பயணிகள் பயணித்துள்ளனர்.
கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை நெல்லியடி முள்ளிப் பகுதியில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பேரூந்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தின் போது பெரியளவில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.