மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைது

ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (05) பிற்பகல் கணவன்-மனைவி இடையே சண்டை மூண்டதையடுத்து, வீட்டின் பின்புறம் இருந்த கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாகத் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதுடன், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் A நோயால் புதிததாக 30 சிறுவர்கள் பலி
பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் A நோயால் குறைந்தது [...]

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார [...]

HND மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக உயர் பட்டதாரி மாணவர் சங்கத்தினால் இன்று சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட [...]