இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.
மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.