கோவிட் தொற்றில் புதிய ஆபத்து


சீனாவில் அதிகரித்துள்ள கோவிட் தொற்றுக்களின் புதிய ஆபத்தான உருமாற்றத்தினால் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகரித்து வரும் மாறுபாடுகளைக் கண்காணிக்க இலங்கையின் செயல்முறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய SARs-Cov2 வகைகள் இந்தியா உட்பட பல நாடுகளில் பல மாதங்களாக பரவி வருகின்றன.

ஆனால் இலங்கையர்கள் இரண்டு தடுப்பூசிகள், பூஸ்டர்கள் மற்றும் கூடுதல் இயற்கை தொற்று தூண்டப்பட்ட பாதுகாப்புக்கான அணுகலை பெற்றுள்ளனர். எனவே தற்போதைக்கு நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *