பாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
நவாலி வடக்கு சனசமுக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் பாலர் முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு தலைவர் செந்தினி தர்மசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினர்களாக கிராம அலுவலர் லோ. அருள்ராஜ் மற்றும் முன்பள்ளிஆசிரியர் இ.இந்திராணி மற்றும் வைத்தியர் தவராசா கோகுலன் யாழ் போதனா வைத்தியசாலை முன்பள்ளி பழைய மாணவனும் ஆவர்.
சஞ்சீவ் தனுஜா அபிவிருத்தி உத்தியோகத்தர் நிர்மல்லேஸ்வரன் டிலக்ரேஸ்வரன் பொறியியலாளர் ராஜேந்திரன் கயேந்திரன் நல்லூர் விவசாய திணைக்களம் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
குறிப்பாக மாணவர்களுக்கு நவாலி வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் குடும்பம் அங்கு பயிலும் 15 மாணவர்களுக்கு கற்றல் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.