தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.
மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன
காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது.
எனினும் வடக்கு காஸா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பலஸ்தீனியர்களின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பவை பெரும் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்பவை.
ஆழ்ந்த தீக்காயங்களுடன் மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை. இவற்றை போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், தடையை மீறி வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்படும்.
இதற்கு முன்னதாகவும் லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதான முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினம் அதன்போது மறுப்பு தெரிவித்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் அவற்றை ஒப்புக்கொண்டது.
அதேபோன்று இப்போதும் இஸ்ரேல் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துமெனில், போர் குற்றம் உள்ளிட்ட கூடுதல் பிரச்சினைகளுக்கும் உள்ளாகக் கூடும் என கூறப்படுகிறது.