நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 2.51 மணியளவில் ரிக்டர் 6.2 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் தொடர்பில் விரிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்கள் இரண்டாவது நிலநடுக்கத்திற்குப் பிறகு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.
Related Post

முல்லைத்தீவில் மாணவிகள் துஷ்பிரயோகம் – மாணவர்களை தேடம் பொலிஸார்
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி [...]

மட்டக்களப்பில் பதற்றம் – பெண்களை சரமாரியாக தாக்கிய பொலிஸார்
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட [...]

யாழில் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாதாதால் குழம்பிய சம்மந்தம்
யாழ்ப்பாணத்தில் குடிப்பழக்கம் இல்லாததால் சம்மந்தம் ஒன்று குழம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ் சாவகச்சேரியில் [...]