வீட்டில் தனிமையில் இருந்த 14 வயது சிறுமி மாயம்
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
குறித்த மாணவியின் பெற்றோர் நேற்றைய தினம் தமது கடைக்குச் சென்று, மீண்டும் சுமார் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.