திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவு, குள கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடை செய்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.