யாழ். அச்சுவேலிநகரில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழுஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில்மற்றைய குழுவை சேர்ந்த ரவுடிகள் அவனை துரத்தி.. துரத்தி.. வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

கடத்தி சென்று கம்பியால் தாக்கி படுகொலை – இலங்கையில் பயங்கரம்
குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். [...]

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைத்தமையால் [...]

அதிகாலையில் கோர விபத்து – தாயும் மகளும் பலி, தந்தையும் மகனும் படுகாயம்
அனுராதபுரம், கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். [...]