காலிஸ்தான் திவிரவாதி கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதை அதுத்து கனடா இந்தியா உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்தியக் கொடியை எரித்ததுடன் , பிரதமர் நரேந்திர மோடியின் அட்டை கட்அவுட்டில் காலணிகளை வீசு அதனை மிதித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, [...]
கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செவஸ்டபோலில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் [...]
அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதியில் இயங்கி வரும் எரிவாயு நிலையத்தில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி [...]
தனது உறவினரின் மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார். 24 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட குற்றத்திற்காக [...]
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். நேற்று (25) இரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கனரக [...]
தென் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் வகையில், நாளை [...]
திருமணமான இளம் தம்பதியர் தமது அந்தரங்க விடயங்களை நேரலையாக இணையத்தளத்தில் பகிர்ந்தமைக்காக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 23 வயதுடைய பெண்ணும் 25 வயதுடைய ஆணும் என கூறப்படுகின்றது. குறித்த தம்பதியர் 16 வயது [...]
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவு, குள கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் [...]
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான [...]
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர இரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை [...]
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜெயக்குமார் டானுகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் [...]
மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த இல்ல முகாமையாளர் திடிரென மயக்கமுற்ற நிலையில் மரணமடைந்தார். நேற்று (25) மாலை நடைபெற்ற நிகழ்வில் மாவடிவேம்பைச் சேர்ந்த 63 வயதுடைய சிவசம்பு பாக்கியராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புலம்பெயர் [...]
சீன ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 ஐ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய செய்திச் சேவையான ஏஎன்ஐயிடம் அமைச்சர் [...]
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு [...]
புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட [...]