மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து இளைஞர் பலி
திருக்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்ததில் அதனை செலுத்திய 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று ஏற்பட்ட பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை இழந்து வயலுக்கு பாயந்து விபத்துக்குள்ளாகியதில் திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த 21வயதுடைய தர்மராசா நிதர்ஷன் எனும் இளைஞன் பலியாகியுள்ளார்.