வட மாகாணத்துக்கான சுற்றுலாக் கண்காட்சி இன்று யாழ் மத்திய கலாச்சார மையத்தில்


வடமாகாண சுற்றுலாப் பயணியகம்,தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தின த்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர் களின் உற்பத்தி களை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று யாழ் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஆ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு கண்காட்சிகூடங்களை அங்குராப்பணம் செய்துவைத்தார்

இவ் கண்காட்சியில் 43 உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செய்துள்ள பொருட்களின் கூடாரங்கள் செய்யப்பட்டுள்ளது

இதில் 18 உணவுசார்ந்த பொருட்களும்,25 கைவினை சார்ந்த உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இதில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம்,மற்றும் உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 1
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 2
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 3
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 4
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 5
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 6
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 7
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 8
யாழ் மத்திய கலாச்சார மையத்தில் 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *