மேலுமொரு பேருந்து விபத்து – 8 பேர் காயம்

புத்தளம் பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது.
புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 10.07.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேரில் 8 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த 15 வயதான சிறுமி [...]

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்றைய தினம் [...]

யாழில் Sinopec ஒயில் அறிமுகம்
Sinopec நிறுவனத்தால் யாழில் இன்று Gold mount brothers pvt மூலமாக புதிய [...]