இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு
மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள 51 நண்டு வகைகளில் 50 நண்டு இனங்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவை, மேலும் துனுமடலாவையில் காணப்படும் நண்டு இனமே ருஸ்ஸ மரங்களைச் சுற்றியுள்ள பொந்துகளில் வாழும் ஒரே இனம் என்பதும் முக்கியமானது என ஆய்வாளர் அனில் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.