வவுனியாவில் முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.