புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 7 பேர் கைது
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 3 பேரும் ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதுடன், இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருப்பபடும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு மோட்டார் சைக்கிகள், கார் ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பபட்டுள்ளதுடன், சான்று பொருட்களையும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசஸ் தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.