Day: April 24, 2023

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைஇலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம், இன்று (24-04-2023) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு [...]

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து – நெடுந்தீவில் போராட்டம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து – நெடுந்தீவில் போராட்டம்

யாழ்.நெடுந்தீவில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மகஜரும் அனுப்பபட்டது. அந்த மகஜரில், நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு [...]

மட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்புமட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் [...]

பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்புபெற்றோர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 [...]

விபத்தில் 23 வயது யுவதி பலி – காதலன் படுகாயம்விபத்தில் 23 வயது யுவதி பலி – காதலன் படுகாயம்

மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வெந்தேசிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி நிமாஷா என்ற 23 வயதுடைய யுவதியே விபத்தில் [...]

கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் கொடுத்த மனைவி கைதுகணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் கொடுத்த மனைவி கைது

தனது கணவனை கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம் (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத உறவைப் பேணியிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. [...]

நியூசிலாந்தில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்நியூசிலாந்தில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [...]

அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்புஅத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங் கட்டணங்கள்) செலுத்த [...]

அத்தை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிஅத்தை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இம்முறை க.பொ.த. [...]

இறக்குமதி முட்டைகள் மேல் மாகாணத்துக்கு மாத்திரம் விநியோகம்இறக்குமதி முட்டைகள் மேல் மாகாணத்துக்கு மாத்திரம் விநியோகம்

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு [...]

இலங்கையில் அதிக வெப்பத்தால் இருவர் மரணம்இலங்கையில் அதிக வெப்பத்தால் இருவர் மரணம்

எப்பாவில் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார். மற்றவர் தனது வயலில் புல் [...]

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 7 பேர் கைதுபுதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 7 பேர் கைது

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு [...]

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் [...]

பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புபல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த [...]