யாழில் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பாரிய போராட்டம்
வடமாகாண பெண்கள் குரல் அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும் வடமாகாணத்துக்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத அரச பாதுகாப்பு படையினரிடமுள்ள பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வட மாகாண ஆளுநரின் செயளாளரிடம் மகஜர் ஒன்றும் இன்று (20) காலை கையளித்துள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவில் 5886 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமும் , மன்னாரில் 654 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமும், கிளிநொச்சியில் 1345 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமும் யாழ்ப்பாணத்தில் 4450 மேற்பட்ட மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ் நிலங்களை மக்களின் பாவனைக்கு விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.