யாழ் வடமராட்சியில் 22 வயதான யுவதி தற்கொலை
யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அண்மைக் காலமாக இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.