எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – அவசர வேண்டுகோள்


வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய, எரிபொருள் விநியோகம் நிறைவடைந்த பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம். என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

நாளை மறுதினம் முதல் QR குறியீட்டு முறைமைக்கு அமைய மாத்திரம், எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் நிற்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *